When love, pls. love : when work, pls. work

நினைவிருக்கா????


*முதன் முதலாய் என்னைப்பார்த்தபின் 
 என் அலைபேசி, எண்கள் கேட்டு
நீ என் தோழியை நச்சரித பொழுதுகள்
உனக்கு நினைவிருக்கிறதா??

* வாங்கிய எண்ணில்
உன் எண்ணங்களை வகைப்படுத்தி
நீ அனுப்பிய குறும்செய்திகள்
நினைவிருக்கிறதா....

* குட்டி போட்ட பூனை போல
என்னை சுற்றி சுற்றி
வந்து நீ ஆர்ப்பரித்த அந்த ஆனந்த
தருணங்கள் நினைவிருக்கா?

* உன் காதலை வழிமொழிந்து
என் காதலை நானும் சொல்ல
வானுக்கும் பூமிக்கும் நீ குதிக்க, 
நீ செய்த  சேஷ்டையை  வேடிக்கை பார்த்த
அந்த பஸ் நிறுத்த போலீஸ்
அதிகாரி உன்னை கண்டித்தது
நினைவிருக்கா?

* உதடு கடித்து சிரிக்கும், உன் சிரிப்பு 
அழகு என்ற உரைத்தபோது,
இரட்டைபொருள்தரும் ஒற்றை கவிதை
சொல்லி சிரித்தாயே... அந்த
இதம் தரும் நாட்கள் நினைவிருக்கிறதா???

* என் முதல் ஊதியத்தைஆர்வமாய் உன்னிடம் கொடுக்க....
காலரை தூக்கி விட்டு... அன்பு ஆணாதிக்கம்
புரிந்த அந்த அந்திநேரம் நினைவிருக்கா?

* கோபத்தில் நான் பொறிந்து
தள்ள, அமைதியாய் கேட்டுவிட்டு,
பின் என் அமைதிகுலைத்து
நீ பேசாமல் என்னை தவிக்க விட்ட
நாட்கள் நினைவிருக்கா????


* நான்  அனுப்பிய குறுச்செய்தியை
இன்றும் அழிக்காமல்...
என் சுவாசம் இது
என்று  காத்து என் காது கடித்த
காலம் நினைவிருக்கா?

* நம் காதலை நம் பெற்றோர்
அறிய, உன் வாழ்கை நான் என்று
அவர்கள் முன் என் கைப்பற்றி
நடந்தது  நினைவிருக்கா?

* ஊரார் முன்னிலையில்
என்  கரம் நீ  பற்றிய அந்த
இதம் தரும் இனிய நாட்கள் நினைவிருக்கா??

காதலே!!!
இந்த காதலில்,
எங்கே பரவசப்பட்டோம்,
எங்கே பயணித்தோம்  என்று
தெரியாமல் வெகு தூரம் சென்று விட்டோம்...
இந்த இனிய நாட்கள் நயமாய் நகர்ந்தாலும்....

இன்று!!!!நீ என்னை
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..

ஆனாலும் என் காதல் கணவனே!!!!
சொல்லிவை,
உன் செல்லத் தோழியிடம்,
என்னை விட அதிகநேரம்
அவளிடம் தான் இதழ் பொருத்தி
உறவாடுகிறாயாம்..
என்னை பார்த்து ஏளனமாய்
கணிசிமிட்டி என் காது கடிக்கிறாள்
 உன் கைபேசி...

என்னை விட உன் அன்பு தோழன்தான்
உன்னை அதிகம் சுமக்கிரானாம்
உன் CT100  என்னை ஏளனமாய் பார்க்கிறது...

என்னை உன் இதயத்தில் வைத்ததை விட
உன் கண்களை இணையத்தில் தான் அதிக நேரம்
வைக்கிறயாம்... உன் கையோடு இருக்கும்
உன் லேப்டாப் சொல்கிறது...

உயிரற்ற பொருளோடு
உறவாடும் என் உயிரானவனே!!!!
உன் உறவான என்னோடு
உறவடாது எனை ஏங்கவைத்தல்
நியாயமா என் காதலே!!!!

என் காதலே!!!!இந்த காதலில்,
இன்று!!!!
பார்ப்பதும் அறிதாகி...
உன்கை பற்றி உலவுதலும் அறிதாகி...
உரையாடலும் குருஞ்ச்செய்தியாய் சுருங்கிப்போக..
பொருள் தேடி வாழ்வின் உயர்வு தேடி  நீ
பறந்து கொண்டே இருக்கிறாய்  ..
இன்பச்சுமைதாங்கும், சுமைதாங்கியாய்
நீ சுழன்று கொண்டே இருக்கிறாய்..
இதில் என்னை நினைவிருக்கா????