முதலமைச்சர் தேவை( கண்டிப்பாக 18+ மட்டும்)
குடும்பத்திற்கு பதவிகள் வழங்க கூடாது.
டாஸ்மாக் கடைகள்மூலம் பலரின் தாலிகளை அறுத்துஅந்த வருவாயினால் இலவசங்கள் வழங்க கூடாது.
ஊழல் அறவே கூடாது
தன் கட்சியினர் ஊழல் செய்தால் அந்த ஆட்சியைவிட இது கம்மி, அந்த மாநிலத்தைவிட இது கம்மி என்று சப்பை கட்டு கட்டக்கூடாது.
ஈழத்திற்காக அரைநாள் உண்ணாவிரதம் கூடாது.
சொந்தமாக தொலைக்காட்சி தொடங்க கூடாது
முக்கியமாக தந்தி அடிக்கவே கூடாது
மலை வாசஸ்தலங்களில் படுத்துக்கொண்டு அறிக்கை அரசியல் செய்யக்கூடாது.
கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அரைவேக்காடுகளை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க கூடாது
நாங்கள் தூய்மையானவர்கள் என்று ஊர் சிரிக்க சொல்ல கூடாது
காலில் விழும் கலாச்சாரம் கூடவே கூடாது.
கூட்டணி தலைவர்களை காக்க வைக்க கூடாது
மந்திரிகளை அடிக்கடி மாற்றக்கூடாது
தனக்கு கட்சியிருப்பதையே மறந்து இன்னொரு கட்சி கிளை செயலாளர் போல் நடந்து கொள்ளக்கூடாது
பொது மேடைகளில் நீலிக்கண்ணீர் வடிக்க கூடாது
அய்யகோ இப்படித்தான் அந்த நாட்டில்...என்று உலக வரலாறு கூறல் கூடாது
தொட்டதற்கெல்லாம் புள்ளிவிபரங்கள் கூறக்கூடாது
மக்களோடும்,தெய்வத்தோடும்தான் கூட்டணி என்று குழப்பக்கூடாது
சினிமாவில் நடிக்க கூடாது
மகனுக்கு மந்திரி பதவி தரும்பட்சத்தில் யாரோடும் கூட்டணி என்று சொல்லக்கூடாது
வாக்கெடுப்பு நடத்தி கூட்டணியை முடிவு பண்ணக்கூடாது
சங்க சொத்துக்களுக்கு தன் மனைவி பெயரை வைக்கக்கூடாது